Skip to main content

இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்து உலக சாதனை படைத்த சிறுவனுக்கு தேனியில் பாராட்டு விழா

தேனியில் களம் மற்றும் ஜீ-டெக் கம்ப்யூட்டர் எஜுகேசன் சார்பில் இங்கிலாந்து-பிரான்ஸ் இடையே உள்ள இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்து உலக சாதனை படைத்த தேனியை சேர்ந்த சினேகன் மற்றும் தேனி மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோர்களுக்கு பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு- பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென்மண்டல செயலாளர் வழக்கறிஞர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்ச்சியில் வையை தமிழ் சங்க நிறுவனர் இளங்குமரன், தேனி சங்க தமிழ் அறக்கட்டளை செயலாளர் தங்கபாண்டியன், வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி நாணயம் சிதம்பரம்,  தேனி வசந்த் அண்ட் கோ மேலாளர் ராஜபிரபு, செஸ் பயிற்சியாளர் ராமகிருஷ்ணன், வி.எம் பாக்சிங் அகாடமி வேர்ல்ட் ஜிம் சேர்மன் கௌசல்யா, தேனி சோல்ஜர் அகாடமி நிறுவனர் சின்னச்சாமி, ஜி-டெக் கம்ப்யூட்டர் எஜுகேசன் நிர்வாக இயக்குனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர்

K.சரவணன், சிறப்பு நிருபர் 

Comments